Sunday, 4 March 2018

வித்தியாசமான கதைக்களத்தில் விஜய்சேதுபதி சீதக்காதி படத்தின் சுவாரசியமான தகவல்கள் !

மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கப்படும் விஜய்சேதுபதியின் சீதக்காதி படத்தை பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.விஜய்சேதுபதியை உங்களக்கு நடிகராக மட்டும் தான் தெரியும்.ஆனால் அவர் தயாரிப்பாளராக,பாடலராக மற்றும் கதை எழுதும் திறனை உடையவராக இருக்கிறார்.
 விஜய் சேதுபதி சீதக்காதி படத்தில் வயதான வேடத்தில் தோன்றுகிறார்.இது இவர் வயதான வேடத்தில் தோன்றும் முதல் படம் அல்ல.இதற்கு முன்பு சூது கவ்வும் படத்தில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு வேடத்தில் தோன்றி அசத்தி இருப்பார்.மேலும் அவரின் சொந்த தயாரிப்பில் உருவான படத்திலும் வயதான வேடத்தில் தோன்றி நடிப்பு திறமையை வெளிப்படுத்தினர்.
 இப்பொழுது சீதக்காதி படத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க வயதான வேடத்தில் தோன்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் பிறந்த நாள் அன்று சீதக்காதி படத்தை முதல் பார்வை போஸ்டர் வெளிவந்து இணையதளங்களில் வைரல் ஆகியது.இதில் இவர் சுருங்கிய கண்கள்,கண்ணாடியுடன் மாறுபட்ட வேடத்தில் இருந்தார்.இந்த ஒப்பனை செய்வதற்கு முழுவதும் நான்கு மணி நேரம் எடுக்குமாம் அதுவரை விஜய் சேதுபதி பொறுமையாக இருந்தார் என இப்படத்தின் இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.மேலும் சிறந்த ஒப்பனை கலைஜர் கெவின் ஹெனி என்பவர் இந்த ஒப்பனையை செய்தார் என்பதும் தெரிய வருகிறது.
சீதக்காதி விஜய்சேதுபத்தின் இருபத்தி ஐந்தாவது படம்.மேலும் காயத்திரி இந்த படத்தை பற்றி கூறும் போது சீதக்காதி கதாபாத்திரத்தின் பின் ஒரு ரகசியம் ஒளிந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.மேலும் இவரின் சீதக்காதி தோற்றமானது கமல் ஹாசனின் இந்தியன் கதாபாத்திரத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என பிரபலங்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இந்த படத்திற்கு இப்பொழுதே கட் அவுட் வைத்து அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.



No comments:

Post a Comment