Breaking News

ஸ்பெசல் ஆம்லெட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க !

இந்த ஆம்லேட் சுவையானதாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் பொழுது இதை செய்து கொடுக்கலாம். இதை காய்கறிகளில் செய்வதால் மிகவும் சத்துமிக்க உணவாகிறது.


தேவையானவை
முட்டை – 5
முட்டைகோஸ் – 1/4 பூ
குடைமிளகாய் – 1
காலிபிளவர் – 1/4 பூ (தண்டு இல்லாமல்)
பெரிய வெங்காயம் – 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் – 2
பொட்டுக்கடலை மாவு – 3 தேக்கரண்டி
மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
காலிபிளவர், முட்டைகோஸ், குடைமிளகாய் ,வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகுத் தூள், பொட்டுக்கடலை மாவு, உப்பு ஆகியவற்றைப் போட்டுச் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக்கொள்ளுங்கள்.
அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். ஆறியதும் முட்டைக் கலவையைக் கொட்டிக் கலந்து, தோசைக்கல்லில் சிறு சிறு தோசை அளவிற்கு ஊற்றி சுற்றிலும் எண்ணெய் ஊற்றி வேகவிடுங்கள். சிறிது வெந்ததும் திருப்பிப் போட்டு, இரண்டு பக்கம் சிவந்ததும் எடுத்துச் சுடச் சுடப் பரிமாறுங்கள்.

சமைத்து ருசித்து தங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்..

No comments