அடையாளமே தெரியாமல் மாறிப்போன திமிரு பட நடிகை!!
2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் திமிரு. இந்த படம் எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி பெரிய வெற்றி அடைந்தது. தருண் கோபியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஷால், ரீமா சென், ஷரி யா ரெட்டி போன்ற பலர் நடித்துள்ளனர். இந்த படம் அப்போது விஷாலுக்கு நல்ல பெயரை வாங்க்கிக்கொடுத்தது.
இதில் வில்லியாக நடித்தவர் ஷரியா ரெட்டி. ஹைட்ரபாத்தில் பிறந்த இவரது தந்தை பரத் ரெட்டி ஒரு கிரிக்கெட் வீரர். இவர் சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வந்தார். அப்போதே மாடலிங் துறையில் பெரிய ஆர்வம் காட்டிவந்தார்.
ஆனால் தன் தந்தையின் ஆசைபடி தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன் பின்னர் தனது வலிமையான குரல் வளத்தினால் இவருக்கு எஸ் எஸ் மியூசிக் எனும் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்தது.
இவர் முதன்முதலில் திரையில் அறிமுகமானது விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் தான். அந்த படத்திற்க்கு பிறகு விஷாலுடன் இணைந்து நடித்த திமிரு படம் இவருக்கு நல்ல பிரபலத்தை பெற்றுத்தந்தது.
இவர் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் நடித்த ப்ளாக் என்ற படம் இவரின் நடிப்பின் உச்சம் என்றே கூறலாம்.
அதன் பின்னர் தமிழ் படங்களான வெயில் ,2008 இல் பிரகாஷ் ராஜ் நடிப்பில் தேசிய விருது பெற்ற காஞ்சிவரம் போன்ற படங்களில் நடித்து பிலிம் ஃபேர் நாமினியாக பரிந்துரை செய்யப்பட்டார்.
பின்னர் 2008 இல் நடிகர் விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர் திருமணத்திற்கு பின் நடிப்பிற்கு முழுக்கு போட்டார் . கடந்த 8 வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்காத இவர் “அண்டவா காணோம்” என்ற படத்தில் வில்லியாக நடித்துவருகிறார்.
No comments