Breaking News

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி உங்களுக்கு தெரியாதவை!

சேதுபதி ராஜபாளையம்,விருதுநகரில் பிறந்தார்.தந்தையின் பெயர் காளிமுத்து அம்மா சரஸ்வதி.ஒரு கண்ணக்கலராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து இப்பொழுது சினிமா திரையுலகில் இந்த உயரத்தில் உள்ளார்.


வளர்ந்தது எல்லாம் ராஜபாளையத்தில்,பிறகு ஆறாம் வகுப்பு கோடம்பாக்கம் ஒரு பள்ளியில் சேர்ந்து படித்தார்.இவர் சுமாராக படிக்கும் மாணவர்.




தனது செலவிற்க்காக மளிகை கடைகளில் வேலை பார்த்துள்ளாராம். தனது பி.காம் படிப்பை முடித்துவிட்டு ஒரு சிமெண்ட் கம்பெனியில் கணக்காளராக சேர்ந்துள்ளார்.இந்த சமயத்தில் கேரளாவை சேர்ந்த ஜெசி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இவர் வேலையில் திருப்தி இயலாமல் இந்தியாவிற்கு திரும்பியுள்ளார்.பிறகு கூத்து பட்டறையில் ஒரு பணியில் சேர்ந்து வேலை பார்க்கும் போது பல சினிமா துறை சம்பந்த பட்ட நபர்களின் அறிமுகம் கிடைத்துள்ளது.

கலைஜர் டிவி நடத்திய நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் திரையிட பட்ட குறும்படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.இவர் பல படங்களில் முன்பு நடித்திருந்தாலும் வெகுவாக பேசப்படவில்லை.2012 வெளி வந்த சுந்தரபாண்டியன் திரைப்படம் இவரின் திறமையை சினிமா உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.அதன் பிறகு பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

 
  

No comments