முதன்முறையாக திருநங்கையாக நடிக்கும் விஜய் சேதுபதி !
தனது எதார்த்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் விஜய் சேதுபதி .தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களின் ரசிகர்களில் கூட இவரை பிடிக்காதவர் யாருமே இல்லைனு உறுதியாக சொல்லலாம்.அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்தவர்.
அவர் நடித்த 'ஜுங்க' படத்தின் டீசரும் வெளி ஆகியுள்ளது .
விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் சீதக்காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி கோலிவுட்டை அசத்திக் கொண்டிருக்கிறது.
இதுவரை 24 படங்களை நடித்து முடித்து விட்ட விஜய் சேதுபதிக்கு, சீதக்காதி 25வது படமாகும்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இந்த படத்தை இயக்குகிறார்.
சீதக்காதியில் விஜய் சேதுபதியின் வயதான தோற்றமும், கம்பீரமும் மற்ற தமிழ் நடிகர்களை மிரள வைத்திருக்கிறது.
ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் மேக்-அப் கலைஞர்கள் கெவின் ஹனே, அலெக்ஸ் நேபிள் சேர்ந்து இந்த வயதான தோற்றத்தை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அவரின் அடுத்த படத்தின் ருசிகர தகவல் ஒன்று வெளிஆகியுள்ளது.
அதில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கிறார் அந்த படத்திற்கு சூப்பர் டீலக்ஸ் என்று பெயர் சுடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த படம் திருநங்கைகளுக்கு ஒரு சமூக அந்தஸ்தை பெற்று தரும் படமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
மேலும் நெகடிவ் கதாபாத்திரத்திற்கு நடிகை நதியாவை படக்குழுவினர் அணுகியுள்ளனர்,ஆனால் நதியா அதை மறுத்துவிட்டார் ஏனெனில் கதாபாத்திரம் தன்மை மிகவும் கொடூரமாக இருப்பதால் மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்
No comments