1982 இல் சுந்தரம்,நிர்மலா என்ற தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.இவருக்கு 2012 பிரியா என்பவருடன் திருமணம் நடந்தது.
2010 வெளிவந்த நகைசுவை தமிழ் படத்தின் மூலம் கதாநாயகனாக உருவாகி எல்லோரையும் அந்த படத்தில் கலாய்த்து தள்ளினார்.அந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் மற்ற படங்களை கலாய்த்து உருவான படம் என்பதால் மக்களுக்கு ஒரு வித்தியாசமான படமாக இருந்தது.எனவே மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடதக்கது.
இந்த படத்தின் தொடக்க பாடல் எல்லோராலும் விரும்பபட்டு அலைபேசியின் அழைப்பு மணியாக நீண்ட நாள் இருந்தது என்பது குறிப்பிடதக்கது.அதன் பிறகு இவர் தொடர்ச்சியாக 2012 கலகலப்பு ,2013 வணக்கம் சென்னை போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தமிழ் படம் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய அமுதன் இயக்குகிறார்.இந்த படத்தில் இரண்டு கதாநாயகி திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் மேலும் சதிஷ்,சந்தன பாரதி,மனோபாலா போன்றோர் நடித்து வருகின்றனர்.
சேட்டன் மற்றும் சசிகாந்த் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஒரு பாடலை மாதவன் சமீபத்தில் வெளியிட்டார்.கண்ணன் இப்படத்திற்கு இசைஅமைத்துள்ளார்.
ஏற்கவே இந்த படத்தில் புகைப்படத்தில் சிவா தியானம் செய்வது போன்று வெளியானது.இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது
No comments:
Post a Comment