தாமிரபரணி படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நடிகையாக அறிமுகம் ஆனவர்தான் பானு.இந்த படத்தில் இவர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருப்பார்
திரையுலகில் பானு என்று அழைக்கப்டும் இவரின் உண்மையான பெயர் எல்சா ஜார்ஜ்.இவரை மலையாள திரையுலகில் முக்த என்ற பெயரில் அறியபடுகிறார்.இவருடைய சொந்த ஊர் கொத்தமங்கலம்.மேலும் இவர் பரதநாட்டியம் கற்றவராம் மேலும் தற்பொழுது சுயதொழில் செய்து வருகிறாராம்.
தாமிரபரணி படத்தில் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் அதற்க்கு அப்பறம் அவர் நடித்த படங்கள் சரியாக ஓடாத காரணத்தால் இவரின் மார்க்கெட் குறைந்தது.இதனால் தமிழ் பட வாய்ப்புகளும் குறைவதை அறிந்த இவர் கேரள திரை உலகிற்கு சென்றுவிட்டார்.
மேலும் சமீபத்தில் தமிழ் படமான வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் சந்தானத்திற்கு மனனவியாக நடித்திருந்தார்.அந்த படமும் எதிர் பார்த்த அளவிற்கு ஓடாத காரணத்தால் மீண்டும் அவரை தேடி பட வாய்ப்புகள் வராமல் போனது.எனினும் சினிமாவை விட்டு ஒதுங்காமல் நடித்து ஏதேனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு 2015ல் திருமணம் நடைபெற்றது.தற்போது இவருக்கு பெண் குழந்தை உள்ளது.இவர் அவ்வப்போது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.மேலும் இவர் சொந்தமாக அழகு நிலையத்தையும் நடத்தி வருகிறாராம்.நடிக்கும்நேரம் தவிர மற்ற நேரத்தில் தனது தொழில் கர்வம் செலுத்தி வருகிறாராம்.
No comments:
Post a Comment