அடையாளம் தெரியாமல் மாறிய காதல் மன்னன் நாயகி. வைரலாகும் போட்டோ உள்ளே.
நடிகர் அஜித்தின் காதல் மன்ன படத்தில் நடித்தவர் நடிகை மானு. இவர் அந்த படத்தில் திலோத்தம்மா கேரக்டரில் நடித்திருப்பார்.
இந்த கேரக்டர் இன்று வரை பேசப்படும் கேரக்டராக இருந்து வருகிறது.
நடன கலைகளில் மிக திறமையாக இருந்த நடிகை மானுவின் திறமையை பார்த்த நடிகர் விவேக் தனது நண்பர், இயக்குனர் சரணிடம் மானுவை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
அதன்பின்னர் மானுவின் 16 வயதில் வந்த வாய்ப்பு தான் அஜித்தின் காதல்மன்னன் பட வாய்ப்பு.
அதன் பிறகு நடிகை மானு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். பின்னர் தனக்கு தெரிந்த நடன கலைகளை வைத்து ஒரு டான்ஸ் ஸ்கூல் ஆரம்பித்தார்.
பின்னர் சந்தீப் துரா என்னும் மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு என்ன சத்தம் இந்த நேரம் என்னும் படத்தில் நடிகை மானு 16 வருடங்களுக்கு பிறகு நடித்தார் .
ஆனால் அந்த படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை . இதனால் மீண்டும் தனது டான்ஸ் ஸ்கூல் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதுவரை நடிகை மானு 2 படங்களே நடித்தாலும் திலோத்தம்மா என்ற பெயர் கூறினால் இன்று வரை மானுவை எல்லோருக்கும் தெரியும்.
No comments